Tamil
ta
HomeContact UsFAQBlog

விற்பனைக்கு உதவும் விழாக்காலங்கள்

நமது நாட்டில் விழாக்களுக்கு பஞ்சமே இல்லை. புத்திசாலி ரீசெல்லரான நீங்கள் இந்த விழாக்களை சரியாகப் பயன்படுத்தி பிராடக்ட்டுகளுக்கு ஆஃபர் மற்றும் தள்ளுபடிகளைத் தந்து உங்களது விற்பனை மற்றும் கஸ்டமர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். இச்சமயங்களில் உங்கள் கஸ்டமர்களின் பழக்க வழக்கங்களைக் கூர்மையாக கவனித்து அதற்கேற்றவாறு உங்கள் யுக்திகளைப் பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு, எந்த பண்டிகை வருகிறதோ அந்தப் பண்டிகைக்குத் தேவைப்படும் பொருட்களை ஷேர் செய்து விற்பனை செய்ய முயற்சிக்கலாம். பண்டிகைக் காலங்களில் எவ்வாறு உங்கள் கஸ்டமர்களைக் கவர்ந்து உங்கள் விற்பனையை அதிகரிக்கலாம் என்பதுக் குறித்துக் காண்போம்.

அனைத்து விழாக் காலங்களிலும் கஸ்டமர்களை வசப்படுத்தும் டிப்ஸ்:

  • உணர்வுகளைத் தூண்டுதல்: பண்டிகைக் காலங்களில் உங்கள் கஸ்டமர்களின் உணர்வுகளைத் தூண்டி அவர்களின் கவனத்தை உங்கள் பக்கம் திரும்பச் செய்யலாம். அனைவரது வாழ்விலும் ஒவ்வொரு பண்டிகையையும் ஒவ்வொரு உணர்வை ஏற்ப்படுத்தும். நீங்கள் அதைப் பயன்படுத்தி உங்கள் விற்பனையை அதிகரிக்கலாம். நீங்கள் உங்கள் கஸ்டமர்கள் குறித்து அதிகம் தெரிந்து வைத்திருக்கும்பட்சத்தில் இவ்விஷயத்தை இன்னும் எளிமையாக செய்ய முடியும். உதாரணத்திற்கு, சகோதரர் தினத்தன்று, "நீங்கள் உங்கள் சகோதரிகள் மீது வைத்துள்ள அன்பின் ஆழத்தை வெளிப்படுத்துங்கள்." எனபதுப் போன்ற வாசகங்களைப் பயன்படுத்தி உங்கள் கஸ்டமர்களின் உணர்வைத் தூண்டி உங்கள் பிஸ்னஸை அதிகரிக்கச் செய்யலாம்.
  • குறைந்தகாலச் சலுகை: காலம் காலமாக அனைத்து வியாபாரிகளாலும் பயன்படுத்தப்படும் வாசகம் இது. இவ்வாசகம் கஸ்டமர்களிடம் ஒருவித அவசர உணர்வை ஏற்ப்படுத்தி உடனே பொருட்களை வாங்க வழிச் செய்யும். நீங்கள் உங்கள் ஆஃபரை இவ்வாசகத்தைப் பயன்படுத்தி ஷேர் செய்யும்போது உங்கள் ஆர்டர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை உங்களால் காண முடியும்.
  • இலவசப் பரிசுகள்: மக்கள் பொதுவாகவே எல்லாவற்றிலும் சற்றுக் கூடுதலாகவே வேண்டுமென்று நினைப்பார்கள். அதுவும் பண்டிகைக் காலங்களில் கண்டிப்பாக நினைப்பார்கள். ஒரு புதிய பிராடக்ட் அல்லது அதிகம் விற்பனையாகாதப் பிராடக்ட்டுக்கு நீங்கள் ஏதேனும் ஒரு ஆஃபர் அல்லது இலவசப் பரிசை அறிவிக்கும்போது அந்தப் பிராடக்ட்டுகள் மீது கஸ்டமர்களுக்கு கவனம் ஏற்ப்படும். இதன் மூலம் அவைகளின் விற்பனை அதிகமாகும். அதேபோல்  உங்களின் ரெகுலர் கஸ்டமர்களைத் தொடர்ந்துத் தக்க வைக்கவும் இந்த ஆஃபர்கள் பயன்படும். எவ்வாறென்றால் இந்த ஆஃபர்களை அவர்களுக்கு மட்டும் சற்றுக் கூடுதலாக தரும்பட்சத்தில், அது அவர்களுக்கு மட்டும் சிறப்பு மரியாதை தருவதாக ஒரு உணர்வை அவர்களுக்கு ஏற்ப்படுத்தி உங்களிடம் தொடர்ந்து பிஸ்னஸ் செய்ய வழிவகுக்கும். 
  • பண்டிகையில்லாக் காலங்களில் விற்பனைக்கான யுக்தி:  பண்டிகையில்லாக் காலங்களில் நீங்கள் சில டீல்களை அறிமுகப்படுத்தி உங்கள் விற்பனையை அதிகரிக்கலாம். உதாரணத்திற்கு, ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம் என்று அறிவிக்கும்போது, இது அதிக கஸ்டமர்களின் கவனத்தைப் பெற்று உங்கள் பிஸ்னஸை அதிகரிக்கச் செய்யும்.
  • இலவச ஷிப்பிங்: இது மற்றொரு சிறப்பம்சமாகும்.  குறிப்பாகத் தொலைவில் வசிக்கும் கஸ்டமர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் ஷிப்பிங் கட்டணத்தை உங்கள் மார்ஜின் தொகையோடு சேர்த்து எண்டர் செய்து விட்டு, இலவச ஷிப்பிங் என்று கூறிக் கொள்ளலாம். நீங்கள் இறுதி விலையை மட்டும் கூறி இலவச ஷிப்பிங் என கூறினால் பல கஸ்டமர்கள் இதை அதிகம் விரும்புவர்.
  • பண்டிகைகளில் கண்டிப்பாக பலனளிக்கும் ஆஃபர்: சில பிராடக்ட்டுகள் பண்டிகைகளில் அதிகம் விற்பனையாகும். ஆகையால் பண்டிகைக் காலங்களில் அப்பிராடக்ட்டுகளில் அதிகம் கவனம் செலுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். உதாரணத்திற்கு, தீபாவளி சமயங்களில் செயின், கம்மல் போன்ற நகைகளை மக்கள் அதிகம் வாங்குவார்கள். ஆகையால் இவைகளை சில ஆஃபர்களுடன் விற்பனை செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.   

விழா நாட்களாக இருந்தாலும் இல்லாவிடிலும் கஸ்டமர்களின் கவனத்தை உங்கள் பக்கம் விழும்படி செய்தால் உங்கள் பிஸ்னஸில் நல்ல இலாபத்தை எப்பொழுதும் பெற முடியும். விழாக் காலங்களில் நீங்கள் செய்யும்  மார்க்கெட்டிங் உங்களுக்கும் கஸ்டமர்களுக்கும் இடையே ஒரு நெருக்கத்தை ஏற்ப்படுத்த உதவும். ஆகையால் நல்ல விளம்பர யுக்திகளைப் பயன்படுத்தி உங்கள் கஸ்டமர்களுக்கு சிறந்த பிராடக்ட்டுகளை விற்பனை செய்து நீங்களும் சிறந்த இலாபத்தைப் பெறுங்கள்.

ஹேப்பி ரீசெல்லிங்!