Tamil
ta
HomeContact UsFAQBlog

ரீசெல்லிங்கில் கீவேர்டுகளின் பங்கு

நீங்கள் கஸ்டமர்களிடம் பேசும்போது சரியான வார்த்தைகளைத்தான் பயன்படுத்துகிறீர்கள் என்ற உணர்வைப் பெற்றிருக்கிறீர்களா? நாம் உரையாடும்போது நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் ஒருவித எதிர்வினையை ஏற்ப்படுத்தும்  வலிமையைப் பெற்றது. ஆகவே நாம் கஸ்டமர்களிடம் பேசும்போது எந்த மாதிரியான வார்த்தைகள் அல்லது வரிகளைப் பயன்படுத்துகிறோம் என்பது மிகவும் முக்கியமாகும். இதை பிஸ்னஸில்  'கீவேர்ட்' என்ற சொல் கொண்டு குறிப்பிடுவர். இதைப் பற்றி விரிவாக இப்போது காண்போம்.

நாம் பேசும்போது ஒரு குறிப்பிட்ட சொல் அல்லது வாசகம் ஒரு குறிப்பிட்ட உணர்வை அல்லது அழகை, அல்லது சிறப்பு அர்த்தத்தை கொடுத்தால் அது கீவேர்ட் என்று அழைக்கப்படும். ஆகவே உங்கள் கஸ்டமர்களிடம் நீங்கள் வழக்கமாகப் பேசிக்கொண்டிருக்கும்போது இந்த கீவேர்டுகளைப் பயன்படுத்தும்போது உங்கள் ரீசெல்லிங் பிராண்ட் குறித்த ஒரு தெளிவை ஏற்ப்படுத்தலாம். 

கீவேர்ட் குறித்த ஆய்வு:

பொதுவாகவே ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசும்போது, அது வாய்மொழியாகவோ அல்லது எழுத்து வழியாகவோ எவ்வாறு இருந்தாலும் அதுக்குறித்து ஒரு ஆய்வை செய்ய வேண்டியது அவசியமாகும். நீங்கள் பிராடக்ட் குறித்து பேச நினைக்கும்போது மீஷோ ஆப்பிலோ அல்லது ஆன்லைனிலோ ஆப்பிராடக்ட்டுகளுக்கு எந்த மாதிரியான கீவேர்டுகளைப் பயன்படுத்துகின்றனர் என்பதைக் குறித்து அறிந்துக் கொள்ள வேண்டும். உங்கள் ஆய்வின்போது எந்த வார்த்தை அல்லது வாசகம் ஒரு அழுத்தத்தை ஏற்ப்படுத்தும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதை குறித்துக் கொண்டு உங்களுக்கு ஏற்றார்போல் அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

கீவேர்ட்/வாசகங்களின் பயன்பாடுகள்:

  •  உங்கள் வாக்கியங்களுக்குத் தொடர்புள்ள கீவேர்டுகளை இணைத்துப் பயன்படுத்துங்கள். உதாரணத்திற்கு, லேட்டஸ்ட் ஃபேஷன், டிரெண்டி, பெஸ்ட் செல்லிங் போன்றவைகள்.
  • ஒரு அவசர நிலையை உருவாக்க கீவேர்டுகளைப் பயன்படுத்துங்கள். உதாரணத்திற்கு, குறைந்த பொருட்களே உள்ளது, குறைந்த கால சலுகை போன்றவை.
  • பிராடக்ட்டின் தரத்தை எடுத்துரைக்க கீவேர்டுகளைப் பயன்படுத்துங்கள். உதாரணத்திற்கு, ரிஸ்க் ஃப்ரீ(risk-free), சான்றிதழ் பெற்ற(‘certified), உண்மையான(genuine) போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள்..
  • கஸ்டமைசபில் பேட்டர்ன்( customizable pattern), சிறந்த டிசைனர்களால் உருவாக்கப்பட்டது என்பதுப் போன்ற கஸ்டமர்களின் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய  கீவேர்டுகளைப் பயன்படுத்துங்கள். 
  • சிறப்புத் தள்ளுபடி, சிறப்புச் சலுகை கூப்பன், உங்களுக்காகவே தயாரிக்கப்பட்டது, போன்ற வாசகங்களை உங்கள் கஸ்டமர்களிடம் நேருக்கு நேர் பார்த்துக் கூறும்போது அவர்களுக்கு நீங்கள் தனி மரியாதை தருவதாக உணர்வார்கள். 

அனைத்து கீவேர்டுகள்/ வாசகங்களை ஒரே வரியில் பயன்படுத்தாதீர்கள். அவ்வாறு செய்தால்  உங்கள் உரையாடலின்போது அது ஒரு போலித் தன்மையாகத் தோன்ற வாய்ப்புள்ளது. உங்கள் கஸ்மருடன் உரையாடும்போது தேவையான கீவேர்டுகளைப் சரியான முறையில் பயன்படுத்தி சிறந்த எண்ணத்தை கஸ்டமரிடையே ஏற்ப்படுத்துங்கள். கீவேர்டுகளை சரியான இடங்களில் பயன்படுத்தி உங்கள் கஸ்டமர்களை கவர்ந்து விற்பனையை அதிகரிக்கச் செய்யுங்கள்.

ஹேப்பி ரீசெல்லிங்!